காலத்தின் கோலத்தால்...
காலத்தின் கோலத்தால்
கவிதை ஒன்று எழுதி வைத்தேன்
கவிதை என்ற மயக்கத்திலே
மயங்கிவிட்ட மங்கை நீ தான்
காதல் என்ற விளையாட்டால்
இதயம் தொலைந்து போனதடி
தொலைந்து போன இதயத்தால்
கண்ணீரும் கசியுதடி
காலம் மறைந்து போனதடி
காதல் வந்த பின்னாலே
காதல் இன்னும் மறையலையே
காலம் போன பின்னாலும்
உயிரைத்தான் தொலைத்து விட்டேன்
உடலை வைத்து என்ன செய்வேன்
இத்யத்தை தொலைத்து விட்டேன்
விழியை வைத்து என்ன செய்வேன்
திருட்டு போன இதயத்தை
திறமையாய் கண்டறிந்தால்
இதயமே வேண்டாமென்று
திருப்பித் தந்தால் நியாயமா?
சோகத்தின் எல்லையிலே
சிக்கிக் கொண்டு நான் வாட
உன் சிரிப்பின் ஒலி கூட
அங்கு வந்து வாட்டுதடி
தாயின் அன்பை மறந்து விட்டேன்
தகப்பன் பாசம் மறந்து விட்டேன்
அறிவின் சிறப்பை மறந்து விட்டேன்
உன் சிரிப்பு மறக்கலையே
நீ செய்த முதல் தவறு
இவ்வுலகில் பிறந்தது தான்
நான் செய்த முதல் தவறு
பிறந்த உன்னை கண்டது தான்
பிரம்மன் செய்த முதல் தவறு
உன்னை அழகாய் படைத்தது தான்
பிரம்மன் செய்த மறு தவறு - என்னுள்
அழகை ரசிக்க வைத்தது தான்
கண்டதும் காதல் தானடி
தவறு ஒன்றும் இல்லையடி
காணாமல் காதல் செய்யும்
காலம் இன்று வந்ததடி
சிற்பியாய் பிறந்திருந்தால்
உளியை வைத்து செதுக்கிடுவேன்
ஓவியனாய் பிறந்திருந்தால்
வண்ணம் வைத்து வரைந்திருப்பேன்
கவிஞனாய் பிறந்துவிட்டேன்
கவிதை எழுத மறக்கலையே
கவிதையெல்லாம் உன் பெயர்தான் - என்
காலமெல்லாம் உன் நினைவேதான்...
1 comment:
Beautiful!
By the way do you really mean it?
Sathiyan S
Post a Comment