முதல் பாடல்
மனசுக்குள்ள ஆயிரம் ஆசை
மதி கொஞ்சம் ஓசை
ததும்பிட விழுந்திடுமோ?
வாழ்க்கையே வானவில் போல
வளைஞ்சு தான் இருக்கும்
அதில் ஒரு சுகமல்லவா?
கண்கள் மூடி
கனவில் பேசும்
கவிதைகள் வரமல்லவா?
மண்ணின் வாசம்
மழையால் வருமே
அதற்காய் தவம் செய்யவா?
(மனசுக்குள்ள...)
இறுகிய எந்தன் நெஞ்சை
இளைப்பார வைத்தவள் நீ
வருடிய வாழ்க்கை எல்லாம்
வசந்தமாய் வருபவள் நீ
உனக்கென வாழுகிறேன் - பொண்மானே
எனக்கென பிறந்தவள் நீ
உலகத்தை ஆட்டி வைக்க - ஏதோ
உன் கண்களில் இருக்குதடி...
(மனசுக்குள்ள...)
பெண்மையை எவன் படைத்தான்
பூமியை குழியிலிட்டான்
வண்மத்தை தூண்டி விட்டான் - என்
வாழ்க்கையை அழித்து விட்டான்
ஆண்மையை எவன் படைத்தான்
பெண்மைக்கு முடிச்சு இட்டான்
அழிந்த ஆண்கள் வரிசையில்
எனக்கும் ஓர் இடம் கொடுத்தான்
அழகானதொரு வாழ்க்கை
எனக்காக தான் கேட்டேன்
அடடா அவனே கைவிரித்து
புதிதாய் எனக்கொரு அறிவளித்தான்
(மனசுக்குள்ள...)
இது தானோ வாழ்க்கை - அட
இது தானே வாழ்க்கை
என் வாழ்க்கை...
நம் வாழ்க்கை...
No comments:
Post a Comment