29.4.06

காலத்தின் கோலத்தால்...


காலத்தின் கோலத்தால்
கவிதை ஒன்று எழுதி வைத்தேன்
கவிதை என்ற மயக்கத்திலே
மயங்கிவிட்ட மங்கை நீ தான்

காதல் என்ற விளையாட்டால்
இதயம் தொலைந்து போனதடி
தொலைந்து போன இதயத்தால்
கண்ணீரும் கசியுதடி

காலம் மறைந்து போனதடி
காதல் வந்த பின்னாலே
காதல் இன்னும் மறையலையே
காலம் போன பின்னாலும்

உயிரைத்தான் தொலைத்து விட்டேன்
உடலை வைத்து என்ன செய்வேன்
இத்யத்தை தொலைத்து விட்டேன்
விழியை வைத்து என்ன செய்வேன்

திருட்டு போன இதயத்தை
திறமையாய் கண்டறிந்தால்
இதயமே வேண்டாமென்று
திருப்பித் தந்தால் நியாயமா?

சோகத்தின் எல்லையிலே
சிக்கிக் கொண்டு நான் வாட
உன் சிரிப்பின் ஒலி கூட
அங்கு வந்து வாட்டுதடி

தாயின் அன்பை மறந்து விட்டேன்
தகப்பன் பாசம் மறந்து விட்டேன்
அறிவின் சிறப்பை மறந்து விட்டேன்
உன் சிரிப்பு மறக்கலையே

நீ செய்த முதல் தவறு
இவ்வுலகில் பிறந்தது தான்
நான் செய்த முதல் தவறு
பிறந்த உன்னை கண்டது தான்

பிரம்மன் செய்த முதல் தவறு
உன்னை அழகாய் படைத்தது தான்
பிரம்மன் செய்த மறு தவறு - என்னுள்
அழகை ரசிக்க வைத்தது தான்

கண்டதும் காதல் தானடி
தவறு ஒன்றும் இல்லையடி
காணாமல் காதல் செய்யும்
காலம் இன்று வந்ததடி


சிற்பியாய் பிறந்திருந்தால்
உளியை வைத்து செதுக்கிடுவேன்
ஓவியனாய் பிறந்திருந்தால்
வண்ணம் வைத்து வரைந்திருப்பேன்
கவிஞனாய் பிறந்துவிட்டேன்
கவிதை எழுத மறக்கலையே
கவிதையெல்லாம் உன் பெயர்தான் - என்
காலமெல்லாம் உன் நினைவேதான்...

27.4.06

என் இரவு...


கனவு
காணவே
சிலர்
இரவு
வேண்டுவார்

உன்
உறவு
வேண்டியே - என்
இரவு
மறையுதே...

அடுத்த காதல்...


காதல்
என்பது
இறக்கும் வரை
என
நினைத்தேன்

இல்லை

பிறக்கும் வரை
"அடுத்த காதல்"

அவளால் நான்...



மனதில் ஓர் மௌன போராட்டம்
கனவில் உன் கவிதை தாலாட்டும்
இணைவதால் இதயம் பூ பூக்குதே...

சிற்பியாய் மாறிப் பார்க்கிறேன்
சிற்பமாய் வடித்துப் பார்க்கிறேன்
தேவதை உன்னை கண்டதாலே...

கண்களைக் களவு கொள்கிறாய்
காற்றில் என்னை கடத்தி செல்கிறாய்
மூச்சில் உன் ஸ்வாசம் கலந்ததாலே...

உணர்வினை உறசிப் பார்க்கிறாய்
உணர்ச்சியை உடைத்து பார்க்கிறாய்
ஊமையாய் உரைந்து போகிறாயே...

Lines in first page of my...


புவியில் பிறவி எய்தி
புரியாமல் வாழ்ந்து வந்தோம்
வாழ்க்கைப் புத்தகத்தை
தினம் தோறும் வாசிக்கின்றோம்

திருப்பிய பக்கங்கள்
இனிமேல் திரும்பாதது - இனி
திருப்பும் பக்கங்கள்
இன்று நாம் அறியாதது

சோதனைகளும் வேதனைகளும்
வாழ்வின் செம்புள்ளி
வேற்றுமையும் விரக்தியும்
நம் மீது கரும்புள்ளி
முற்றுப்புள்ளிக்காய்
முன்னேருவோம்

முடிவின்றி
தொடரட்டும்
நம் நட்பு
இப்புத்தகதில்...

25.4.06

விலை மாது


சிறகாக பறந்திடவே
தினம் தோறும் எண்ணிடுவாள்
சிதைகின்ற மனதொடு
புதை குழியில் மணம் சேர்ப்பாள்

இரவின் இடையினில்
இன்பத்தை உணர்ந்துவிட்டு
பகலின் மடியினில்
பாரத்தை பணயம் வெய்ப்பாள்

பால் கொடுக்கும் வண்ணத்தை
பலியாக எண்ணிவிட்டு
பாராட்டை எண்ணாமல்
பரிசையும் பெற்றிடுவாள்

சோகத்தின் சுவடுக்கு
சுகம் சேர்க்க வருபவர்கள்
சுகங்ளை பெற்றுவிட்டு
சுமையை மட்டும் பரிசளிப்பர்

முதல் பாடல்

மனசுக்குள்ள ஆயிரம் ஆசை
மதி கொஞ்சம் ஓசை
ததும்பிட விழுந்திடுமோ?

வாழ்க்கையே வானவில் போல
வளைஞ்சு தான் இருக்கும்
அதில் ஒரு சுகமல்லவா?

கண்கள் மூடி
கனவில் பேசும்
கவிதைகள் வரமல்லவா?

மண்ணின் வாசம்
மழையால் வருமே
அதற்காய் தவம் செய்யவா?
(மனசுக்குள்ள...)



இறுகிய எந்தன் நெஞ்சை
இளைப்பார வைத்தவள் நீ
வருடிய வாழ்க்கை எல்லாம்
வசந்தமாய் வருபவள் நீ

உனக்கென வாழுகிறேன் - பொண்மானே
எனக்கென பிறந்தவள் நீ
உலகத்தை ஆட்டி வைக்க - ஏதோ
உன் கண்களில் இருக்குதடி...
(மனசுக்குள்ள...)



பெண்மையை எவன் படைத்தான்
பூமியை குழியிலிட்டான்
வண்மத்தை தூண்டி விட்டான் - என்
வாழ்க்கையை அழித்து விட்டான்

ஆண்மையை எவன் படைத்தான்
பெண்மைக்கு முடிச்சு இட்டான்
அழிந்த ஆண்கள் வரிசையில்
எனக்கும் ஓர் இடம் கொடுத்தான்

அழகானதொரு வாழ்க்கை
எனக்காக தான் கேட்டேன்
அடடா அவனே கைவிரித்து
புதிதாய் எனக்கொரு அறிவளித்தான்
(மனசுக்குள்ள...)



இது தானோ வாழ்க்கை - அட
இது தானே வாழ்க்கை
என் வாழ்க்கை...
நம் வாழ்க்கை...

சொல்லாத காதல்...

சொல்லாத காதல் பொல்லாதது
வெல்லாத காதல் வீழாதது...
என்னாலும் எனக்குக் கவலை இல்லை
எந்த பெண்ணோடும் எனக்குக் காதலில்லை…

வண்ணத்து பூச்சி வாழ்வதற்க்கு
பூக்கள் கண்ணீர் வடிப்பதில்லை...
விண் மீன்கள் விண்ணில் சிரிப்பதற்கு - தினமும்
வெண்ணிலா துணையாய் இருப்பதில்லை...

ஒரு காதல் கடிதம்

உண்மையைச் சொல்ல ஆசைப்பட்டு
உள்ளத்தில் இருப்பதை உரைத்து விட்டேன்
காலத்தை மறந்து எனை ஏற்பாய் - என்ற
காலைக் கனவினில் தவறுண்டோ?

மரணத்தைக் கூட என் மனம் ஏற்கும் - உன்
மறுப்பை ஏற்காததேன்…
வரம் ஏதும் கிடைக்கும் என்று - இன்னும்
நாசி மூச்சு விடுகிறதேன்?

புண்ணியம் ஏதும் செய்ததில்லை - என்
பாவத்தை நானும் மறக்கவில்லை
காற்றில் கரையும் கற்பூரம் போல்
காலம் நம் கசப்பை கரைக்காதோ?

உறக்கம் என்பதை தொலைத்து விட்டேன்
தொலைந்த உறவை தேடுகிறேன்
முடிந்த வாழ்க்கை முற்றும் போடும் வரை
சிறிய ஆசை சிறகடிப்பதேன்

தயக்கங்கள் இருந்தது உண்மையடி - பல
தவறுகள் இழைத்ததும் உண்மையடி
செய்த குற்றத்தை சீர்படுத்த - ஒரு
சந்தர்ப்பம் எனக்களிப்பாயோ?

என் இதழ்கள் சொல்ல நினைத்ததை
என் இமைகள் சொல்ல நினைத்ததை
என் இதயம் சொல்ல நினைத்ததை
இக் கவிதை சொல்லி விட்டதடி.....

பெண்மை...


மலர்வது ஆண்
மலரவைப்பது பெண்
சுவைப்பது ஆண்
சுமை தாங்குவது பெண்...








சிறைக்குள் சிலை செய்து
சிதையாமல் பெற்றெடுப்பாள் பெண்
வலியை வயிற்றில் மறைத்துவிட்டு - பெண்டு
வாழ்க்கைக்கு வழி தேடுபவள் பெண்...

நீ?



சிறகு போலவே
இரவு இருட்டினில்
நான் பறக்க நினைப்பவன்
நீ?

தவணை முறையினில்
சில தவறு செய்தபின்
அதை திருத்த நினைப்பவன்
நீ?

பொழுது விடிந்ததும்
என் போர்வை மறைவினில்
பல கனவை ரசிப்பவன்
நீ?

புதுமை செய்யவே - நான்
பிறவியெடுத்தவன்
என்னை புரிந்து கொண்டாலே
இப் புவியில் தோழி நீ.......

என் முதல் கிறுக்கல்

உன் விழிகள் சொல்லுதே
ஓராயிர அர்த்தம்
அதில் ஒன்று சொல்லுமோ
இன்று எந்தன் பக்கம்

சில இதழ்கள் சொல்ல நினைத்ததை
அவர் இமைகள் சொல்லி முடிக்குமே
உன் இமைகள் மூடாதிருக்கவே
நான் இமயம் கூட தாண்டுவேன்

என் கனவு காணும் கண்களில்
கவிதை முளைப்பதில்லை
உன் கண்கள் பார்த்த நிமிடம்
நானும் கவிஞனாய் ஆனேனே.....