தயார் செய் உன் புதிய உலகுக்காய்
நாளை
இரவு உறக்கத்திற்கு
இமை மறுக்கும்
இயந்திர வாழ்க்கை
நமதாகும்
பொறாமை உலகில்
பரிதவிப்பாய்
போர்க்களத்தில்
குடி இருப்பாய்
சூரிய வெப்பம்
சுகமாகும்
நயவஞ்சகம்
நாடாளும்
வெண்ணிலவுக்காய்
விழி ஏங்கும்
விரக்தியில்
வீடு காண்பாய்
கவலைகளுக்குள்
கால் பதிப்பாய்
ஆகவே
இன்று
போராட
தயார் செய்
போதுமென்பதை
போஷாக்காக்கு
நரிகளுக்குள்
வாழ்
புத்தியைய்
கூர் செய்
புன்னகையை
தவழ விடு
வாழ்க்கை வசந்தமாகும்...